இலங்கையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இன்றிரவு ஏற்படலாம் - சர்வதேச மன்னிப்பு சபை
பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 Km இற்கும் குறைவான பரப்பில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 50000 மக்கள் கனரக ஆயுதங்கள் மூலம் கொல்லப்படவும்,அதிக எண்ணிக்கையில் காயப்படுத்தப்படவும்,காயங்கள் குணப்படுத்தப்படாமல் நோயினாலும்,போசாக்கின்மையாலும் இறக்கவும் வாய்ப்புக்கள் பெருகி விட்டன என சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த சில தினங்களாக, இந்தியாவின் மிக வலுவான மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் கொல்லப்படுவதிலிருந்து சிறு பாதுகாப்பு வழங்கியிருந்த போதும் இன்று தேர்தல் முடிந்தவுடன் இந்த வழியும் அடைக்கப்பட்டு விடும். அத்துடன் இலங்கை அரசாங்கம் மேலும் மிக வலுவான கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தத் தொடங்கும். விடுதலைப் புலிகளும் தங்கள் பங்கிற்கு யுத்த விதிகளை மீறிச் செயற்படுவதாகவே குற்றம் சாட்டப்படுகின்றது.பொது மக்களைத் தடுத்து வைத்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இவ்வேளை அரசாங்கத்தின், மீடியா மீதான அடக்கு முறை சில மாதங்களாகக் கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இதுவரை 16 மீடியா பணியாளர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டும் பலர் கடுமையாக மிரட்டப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், காணாமற் போயுமுள்ளனர். சமீபத்தில் வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் எதிர் நோக்கும் இன்னல்களை வெளிக் கொணர்ந்த பிரித்தானியாவின் சானல் 4 ஊடகவியலாளர்கள் மூவர் நாடுகடத்தப்பட்டதுடன் பாதுகாப்பமைச்சால் இலங்கையிலிருந்து இவ்வாறான தகவல்கள் சொல்லக் கூடாது என மிரட்டப்பட்டனர்.

இந்த விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு ஐ.நா பாதுகாப்புச்சபை உடனடியாகத் தொழிற்பட வேண்டும் எனவும் இலங்கைக்கு நிதியுதவி அழிக்கும் அனைத்து சர்வதேச அமைப்புக்களும் அவை மனித உரிமைகளைப் பறிப்பதற்காக உபயோகிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முக்கிய வழங்குநரான ஜப்பான் பாதுகாப்புச் சபை மூலம் நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.