இந்தியா என்ன நினைக்கிறது என்பதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. நான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் இந்தியாவின் போராட்டமே. எமது இராணுவ வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட் டியுள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிவரும் "தவீக் " சஞ் சிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்ட வாறு கூறினார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை மூல மாக அரசமைப்புக்கான 13 ஆவது திருத் தம் உருவானது. இதன் அடிப்படையில் உள்நாட்டில் தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை இந்தியாவின் நிலைப்பாட்டையும் கவனத்தில் எடுக்கின்றது; கருத்தில் கொள்கின்றது. இலங்கையின் ஒவ்வொரு நபரினதும் கருத்தையும் ஆராய்ந்த பின்னரே இம்முறை அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்.
அரசியல் தீர்வின் உள்ளடக்கத்தை நாங்களே தீர்மானிப்போம்சமாதானம் என்பது இலங்கையின் நன்மை குறித்த விடயம் என்பதால் அரசியல் தீர்வின் உள்ளடக்கம் குறித்து நாங்களே ஆராய்ந்து தீர்மானிப்போம். தென்னாசியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு பகுதியையே நான் முன்னெடுத்துள்ளேன். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நான் இந்தியாவின் சார்பில் யுத்தத்தை முன்னெடுத்துள்ளேன்.
என்னுடைய வெற்றியும் சோனியாவின் வெற்றியும் ஒரே தருணத்தில்....
இந்தியா என்ன நினைக்கின்றது என்பதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் வெற்றியும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தன. அவர் தேர்தலில் வெற்றிபெற்றதைப் பாராட்டி அவருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த யுத்தத்தில் இந்தியாவின் தார்மீக ஆதரவு முக்கியம்.
யுத்த வெற்றிக்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் என்னைப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்குத் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர் என்றார்.