மோதல் காரணமாக இடம்பெயர்ந்தவர் களுக்கான முகாம்களில் காணாமல் போகும் இளைஞர்களின் எண்ணிக்கை அச்சம் தரும் அளவுக்கு அதிகரித்துள்ளது என இலங்கையைச் சேர்ந்த பிரபல மனித உரிமைப் பணியாளர் சுனிலா அபயசேகர தெரிவித் துள்ளார்.
கனடா ரொரன்ரோவின் ஊடகமொன் றிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை விவரங் களை ஆவணப்படுத்தும் "இன்போர்ம்"அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனிலா அபயசேகர இதனைத் தெரிவித் துள்ளார்.
ஒரே நாளில் பட்டினியால் 14 முதியவர்கள் பலிமுகாம்களில் உள்ள 3 லட்சம் மக்களின் நலன்கள் குறித்து அரசுபோதிய கவனம் எடுக்கவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், முகாம்களில் உள்ளவர்களை உரிய விதத்தில் பதிவு செய்யும் நடைமுறை இல் லாததால் ஆயுதக்குழுக்களால் இலகுவாக இவர்களைக்கொண்டு செல்ல முடிகின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
முகாம்களில் உள்ள பலர் வாடி வதங்கியவர்களாகவும், களைத்துப் போனவர்க ளாகவும், தொற்றுநோய் மற்றும் காயங்கள்
உள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பட்டினி காரணமாக ஒரே நாளில் 14 முதியவர்கள் இறந்தனர் என்பதை வவுனியா நீதிபதியொருவர் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகாமில் உள்ள 3 லட்சம் மக்களையும் விசாரணை செய்த பின்னரே சர்வதேசமனிதாபிமான அமைப்புகள் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களை விசாரணைக்கு உட்படுத்தப்படும் பகுதிகளுக்கு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர்.
மனிக்பாமில் இருந்து 200 இளைஞர்களை ஆயுதக்குழுக்கள் கூட்டிச் சென்றனர் கடந்த வாரம் வவுனியா மெனிக்பார்ம் முகாமிலிருந்து 17 வயதிற்கு உட்பட்ட 200 இளைஞர்கள் கூட்டிச் செல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ள அவர் அரசுஇவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இவர்களது பெற்றோர்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுதன்னிடம் சரணடைந்தவர்களில் 10 ஆயிரம் விடுதலைப் புலிகள் உள்ளனர் எனத் தெரிவிக்கின்றது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் யார் என்பது எமக்குத் தெரியாது"என்றும் அவர் குறிப்பிட்டார்.