உலகத்தமிழ்ப் பெருமக்களே உங்கள் குரல்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமையிருக்கிறது!
மிக அண்மையில் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்பாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்களும் பிரபல ஆங்கிலப் பாடகி மாயா அருட்பிரகாசம் அவர்களும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, சிறிலங்காவின் பயங்கரவாத அரசாங்கம் தனது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம ஊடாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித கோகன்ன ஊடாகவும் அவசர மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனை எம்தமிழ்ப் பெருமக்களின் குரல்கள் அவர்களுக்கு ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவேநாம் பார்க்கவேண்டும். எனவே, உலகத்தமிழ்ப் பெருமக்களே நீங்களும் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள்; உங்கள் குரல்களுக்கும் அழுத்தம்கொடுக்கும் வல்லமையிருக்கிறது.
No Responded To This Post
Leave A Reply