இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த கப்பலொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கப்டன் அலி என்ற கப்பலையே இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அதிலிருந்த 15 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில், மேற்கு திசையில் 250 கடல்மையில் தூரத்தில் வைத்தே கப்டன் அலி கப்பலை கைது செய்துள்ளதாகவும் அக்கப்பலை கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் இருந்து வன்னி மக்களுக்கு பொருட்களை ஏற்றிவந்த கப்பலே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
No Responded To This Post
Leave A Reply