இலங்கைத்தீவில் இடம்பெற்ற போரில்
“ நெற்றிக்கண் திறப்பினும்…! ( ஐ நா நவனீதம்பிள்ளை)”
புதன், 27 மே, 2009
|
email this
|
digg it
No comments
Posted by இராவணன் தேசம்
வலுவான ஆதரவு நிலையில் இலங்கை அரசு!
|
email this
|
digg it
No comments
Posted by இராவணன் தேசம்
ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் முதல் முறையாக நேற்று இடம்பெற்ற இலங்கை குறித்த விசேட அமர்வை இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வலுவான ஆதரவுடன் இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.
மேலும் இலங்கை தொடர்பான ஐரோப் பிய ஒன்றியத்தின் பிரேரணையை எதிர் கொள்ளும் விதத்தில் இலங்கை அரசு தனது பிரேரணையொன்றையும் அங்கு முன்வைத்துள்ளது.இதேவேளை, ஜெனிவாவில் இடம்பெற்ற ஆரம்பக் கட்டக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவு தரும் விதத் தில் மேற்படி இந்த அமர்வு கைவிடப்பட வேண்டுமென கோரியுள்ளன.
இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா ஆரம்ப கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.இது தொடர்பாக "த டைம்ஸ்" மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
ஜெனிவாவில் நடைபெற்ற ஆரம்பக்கட்டக் கூட்டத்தில் கடும் மோதல் போக்கு தென்பட்டதாகவும், வாக்குவாதங்கள் இடம்பெற்றன எனவும் தெரிவித்துள்ள பார்வையாளர்கள் 47 நாடுகளைக்கொண்ட மனித உரிமை கவுன்ஸில் இலங்கை விவகாரத்தையொட்டி கடுமையாக பிளவுபட்டுள்ளது எனவும்சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரேரணைக்கு 18 நாடுகள் ஆதரவளித்துள்ள அதேவேளை, 18 நாடுகள் இதனை எதிர்க்கின்றன. ஒன்பது நாடுகள் இன்னமும் இது குறித்துத் தீர்மானிக்காத நிலை காணப்படுகின்றன.
இலங்கை குறித்த விசேட அமர்வு, மனித உரிமை கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் நிறைவேறுகின்றதா என்பதை பரிசோதிக்கும் களமாக அமையும் எனசுட்டிக்காட்டப்படுகின்றது.மனித உரிமை கவுன்ஸில் தன்மீது திணிக்கப்பட்ட காஸா குறித்த விசாரணையை ஏற்றுக்கொண்டது என்பதைசுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் இலங்கை குறித்து முழுமையான விவாதம் இடம்பெறாமல் தவிர்ப்பது குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையில் இலங்கை விடயத்தையொட்டி சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பது குறித்து ஏதும் தெரிவிக்கப்படாதது குறித்து ஏற்கனவே மனித உரிமை அமைப்புகள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தனது 14 சகாக்களுடன் இணைந்து இலங்கை முன்வைத்துள்ள மாற்றுப் பிரேரணையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டுள்ளன. சர்வதேச சமூகம் மேலும் நிதியுதவியை இலங்கைக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளது.ஜெனிவாவில் இடம்பெற்ற முன்னோடிக் கூட்டத்தில் இரு நிகழ்ச்சி நிரலிற்கும் மத்தியில் கடுமையான மோதல் காணப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா போன்ற நாடுகள் இலங்கை குறித்த விசேட அமர்வை கைவிடவேண்டுமென கோரியுள்ளன.இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா,சீனா, எகிப்து ஆகிய நாடுகள் வெளிநடப்புச் செய்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயுதங்களை வழங்கிய உதவிய பல நாடுகளில் வலுவான ஆதரவுடன் இலங்கை இந்த விசேட அமர்வை எதிர்கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
அய்யோ என்றை அய்யோ உலக தமிழ் உறவுகளே உங்கள் சொந்த உறவுகளை காப்பாற்றுங்கள்...!
புதன், 13 மே, 2009
|
email this
|
digg it
1 comment
Posted by இராவணன் தேசம்
இலங்கையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இன்றிரவு ஏற்படலாம் - சர்வதேச மன்னிப்பு சபை
பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 Km இற்கும் குறைவான பரப்பில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 50000 மக்கள் கனரக ஆயுதங்கள் மூலம் கொல்லப்படவும்,அதிக எண்ணிக்கையில் காயப்படுத்தப்படவும்,காயங்கள் குணப்படுத்தப்படாமல் நோயினாலும்,போசாக்கின்மையாலும் இறக்கவும் வாய்ப்புக்கள் பெருகி விட்டன என சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த சில தினங்களாக, இந்தியாவின் மிக வலுவான மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் கொல்லப்படுவதிலிருந்து சிறு பாதுகாப்பு வழங்கியிருந்த போதும் இன்று தேர்தல் முடிந்தவுடன் இந்த வழியும் அடைக்கப்பட்டு விடும். அத்துடன் இலங்கை அரசாங்கம் மேலும் மிக வலுவான கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தத் தொடங்கும். விடுதலைப் புலிகளும் தங்கள் பங்கிற்கு யுத்த விதிகளை மீறிச் செயற்படுவதாகவே குற்றம் சாட்டப்படுகின்றது.பொது மக்களைத் தடுத்து வைத்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இவ்வேளை அரசாங்கத்தின், மீடியா மீதான அடக்கு முறை சில மாதங்களாகக் கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இதுவரை 16 மீடியா பணியாளர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டும் பலர் கடுமையாக மிரட்டப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், காணாமற் போயுமுள்ளனர். சமீபத்தில் வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் எதிர் நோக்கும் இன்னல்களை வெளிக் கொணர்ந்த பிரித்தானியாவின் சானல் 4 ஊடகவியலாளர்கள் மூவர் நாடுகடத்தப்பட்டதுடன் பாதுகாப்பமைச்சால் இலங்கையிலிருந்து இவ்வாறான தகவல்கள் சொல்லக் கூடாது என மிரட்டப்பட்டனர்.

இந்த விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு ஐ.நா பாதுகாப்புச்சபை உடனடியாகத் தொழிற்பட வேண்டும் எனவும் இலங்கைக்கு நிதியுதவி அழிக்கும் அனைத்து சர்வதேச அமைப்புக்களும் அவை மனித உரிமைகளைப் பறிப்பதற்காக உபயோகிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முக்கிய வழங்குநரான ஜப்பான் பாதுகாப்புச் சபை மூலம் நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
மீண்டும் சிங்களம் மட்டும் .....துரிதகதியில் அமுல்????
சனி, 9 மே, 2009
|
email this
|
digg it
No comments
Posted by இராவணன் தேசம்

புலிகளிடமிருந்த தமிழர் பிரதேசங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் எமது பிரதேசங்கள் எப்படிசிங்கள மையப்படுத்தப்படும் என்பதற்கான ஓர் முன்னறிபிப்பை நேற்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதாவது எமது பாரம் பரிய தமிழர் பிரதேசமான கிளிநொச்சி மாவட்டத்தில்
உள்ள பரத்தனில் ஓரு எரிபொருள்மீள்நிரப்பு நிலையத்தை அரச படையினர்
திறந்து வைத்துள்ளார்களாம். அதில் உள்ள பெயர்ப் பலகை முற்றுமுழுதாக
சிங்களத்திலேயே உள்ளது, தமிழயே காணக்கிடைக்கவில்லை. இப்பொழுதே
இப்படியேன்றால் போகப்போக எப்படியிருக்கும்??. மற்றும் அந் நிகழ்வில்
பௌத்த தேரர்களே மட்டுமே சமய குருமார்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.
இவை சிங்கள அரசில் உறிப்போன சிங்கள மொழி வெறியையும் பௌத்த
மதவெறியையுமேஎடுத்துக் காட்டி நிற்கின்றது.
இதில் என்னவென்றால், சிங்களவனின் மொழி, மத வெறி அப்படியே மாறமல்
இருக்க எக்கட சிலதுகள் எமதுவரலாற்றுப் பாடங்களை மறந்துபோய் இப்பொழுது சொல்லிக் கொண்டு திருகிறார்கள் சிங்களவர்களுடன் சேர்ந்துவாழப்போயினாமாம். அதைவிட சிங்களமும் தமிழும் எல்லோரும் படிக்கவேண்டுமாம். நல்லாச் சொல்லுறியல்….,கடைசியில் ஒன்டுமே மிச்சாது.
இதில் குறிப்பிடக் கூடிய விடையம் என்னவென்றால் கிளிநொச்சியானது,
இதில் குறிப்பிடக் கூடிய விடையம் என்னவென்றால் கிளிநொச்சியானது,
மகித்தாவின் காலை நக்கும்ஜனநாயகத்துக்கம், சகிப்புத் தன்மைக்கும் எமக்கு
எடுத்துக்காட்டாய் விளங்கும் ஜயா ஆனந்த சங்காரியாரின் சொந்ததொகுதி என எங்கேயோ கேட்ட ஞாபகம்.
எனியாவது திருந்துங்களா இந்தயென்மங்கள்?????
எனியாவது திருந்துங்களா இந்தயென்மங்கள்?????
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இலங்கை நேரம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எம்மைப் பற்றி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தொடர்புகளுக்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மனித பேரழிவு
பாகம் இரண்டு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கருத்துப்படம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பெட்டகம்
-
▼
2009
(46)
- ► 06/07 - 06/14 (1)
- ► 05/31 - 06/07 (2)
- ► 05/24 - 05/31 (6)
- ► 05/10 - 05/17 (1)
- ► 05/03 - 05/10 (1)
- ► 04/26 - 05/03 (2)
- ► 04/19 - 04/26 (2)
- ► 04/12 - 04/19 (3)
- ► 04/05 - 04/12 (1)
- ► 03/29 - 04/05 (6)
- ► 03/22 - 03/29 (4)
- ► 03/15 - 03/22 (2)
- ► 03/08 - 03/15 (4)
- ► 03/01 - 03/08 (3)
- ► 02/22 - 03/01 (5)
- ► 02/15 - 02/22 (2)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தமிழினப்படுகொலைகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கறுப்பு ஜூலை

எம்மவர் நிகழ்வுகள்