ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் முதல் முறையாக நேற்று இடம்பெற்ற இலங்கை குறித்த விசேட அமர்வை இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வலுவான ஆதரவுடன் இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.
மேலும் இலங்கை தொடர்பான ஐரோப் பிய ஒன்றியத்தின் பிரேரணையை எதிர் கொள்ளும் விதத்தில் இலங்கை அரசு தனது பிரேரணையொன்றையும் அங்கு முன்வைத்துள்ளது.இதேவேளை, ஜெனிவாவில் இடம்பெற்ற ஆரம்பக் கட்டக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவு தரும் விதத் தில் மேற்படி இந்த அமர்வு கைவிடப்பட வேண்டுமென கோரியுள்ளன.
இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா ஆரம்ப கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.இது தொடர்பாக "த டைம்ஸ்" மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
ஜெனிவாவில் நடைபெற்ற ஆரம்பக்கட்டக் கூட்டத்தில் கடும் மோதல் போக்கு தென்பட்டதாகவும், வாக்குவாதங்கள் இடம்பெற்றன எனவும் தெரிவித்துள்ள பார்வையாளர்கள் 47 நாடுகளைக்கொண்ட மனித உரிமை கவுன்ஸில் இலங்கை விவகாரத்தையொட்டி கடுமையாக பிளவுபட்டுள்ளது எனவும்சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரேரணைக்கு 18 நாடுகள் ஆதரவளித்துள்ள அதேவேளை, 18 நாடுகள் இதனை எதிர்க்கின்றன. ஒன்பது நாடுகள் இன்னமும் இது குறித்துத் தீர்மானிக்காத நிலை காணப்படுகின்றன.
இலங்கை குறித்த விசேட அமர்வு, மனித உரிமை கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் நிறைவேறுகின்றதா என்பதை பரிசோதிக்கும் களமாக அமையும் எனசுட்டிக்காட்டப்படுகின்றது.மனித உரிமை கவுன்ஸில் தன்மீது திணிக்கப்பட்ட காஸா குறித்த விசாரணையை ஏற்றுக்கொண்டது என்பதைசுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் இலங்கை குறித்து முழுமையான விவாதம் இடம்பெறாமல் தவிர்ப்பது குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையில் இலங்கை விடயத்தையொட்டி சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பது குறித்து ஏதும் தெரிவிக்கப்படாதது குறித்து ஏற்கனவே மனித உரிமை அமைப்புகள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தனது 14 சகாக்களுடன் இணைந்து இலங்கை முன்வைத்துள்ள மாற்றுப் பிரேரணையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டுள்ளன. சர்வதேச சமூகம் மேலும் நிதியுதவியை இலங்கைக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளது.ஜெனிவாவில் இடம்பெற்ற முன்னோடிக் கூட்டத்தில் இரு நிகழ்ச்சி நிரலிற்கும் மத்தியில் கடுமையான மோதல் காணப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா போன்ற நாடுகள் இலங்கை குறித்த விசேட அமர்வை கைவிடவேண்டுமென கோரியுள்ளன.இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா,சீனா, எகிப்து ஆகிய நாடுகள் வெளிநடப்புச் செய்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயுதங்களை வழங்கிய உதவிய பல நாடுகளில் வலுவான ஆதரவுடன் இலங்கை இந்த விசேட அமர்வை எதிர்கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
No Responded To This Post
Leave A Reply