முல்லைத்தீவில் இருந்து வரும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை திருமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதில்லை எனவும் அவர்கள் இனிமேல் நேரடியா புல்மோட்டை மற்றும் பதவியாவில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லப்படுவர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதை சிறிலங்கா அரசாங்கத்தின் இனசுத்திகரிப்பு நடவடிக்கையின் இன்னொரு வடிவமாகவே பார்க்கவேண்டியுள்ளது. ஏனெனில் இதுவரையும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளிவருவதுவும். இராணுவத்தினரது கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி எப்படியோ சில நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வேலை செய்யும் தமிழர்களின் உதவிகளுடன் தமது உறவினர்களுக்கு தாம் வந்திருப்பதை தெரிவிப்பதுவும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனசுத்திகரிப்பு நடவடிக்கைக்கு மிக இடைச்சலாகவே இருந்து வந்துள்ளது.
இப்படியாகத் தகவல்கள் வெளிக் கசிவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கமானது புதிதாக ஒரு வைத்தியசாலையை புல்மோட்டையில் நிறுவியுள்ளது. இங்கு இந்திய வைத்தியர்களே கடமையாற்ற இருப்பதால் அங்கு வரும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தமிழர்களின் தொடர்புகளைப் பெறுவது தடுக்கப்படும். எனவே எனிவரும் காலங்களில் இனவடிகட்டல் நடவடிக்கைகளை புல்மோட்டையில் வைத்தே இராணுவமானது சத்தம் இல்லாமல் செய்யும் என்பதே யாதார்த்தமாகும். இதற்கு இந்திய வைத்தியர்கள் துணைபோகிறார்கள் என்பதே உண்மையாகும்.
இந்த இந்திய வைத்தியர்கள் காயமடைந்தவர்களைப் பாராமரிக்கும் ஏதாவது ஒரு வைத்தியசாலையில் கடைமையாற்ற முன்வரவில்லை என்பதால் இந்த இந்திய வைத்தியர்கள் இந்திய இராணுவ வைத்தியர்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் இந்திய இராணுவமானது மிக நீண்ட காலமாக மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவில் ஈடுபடாததால் அவ் இராணுவத்தினருடைய இராணுவ வைத்தியர்களுக்கு போர்காயங்கள் தொடர்பாக அனுபவங்கள் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் நவீன போர் காயங்கள் தொடர்பான அனுபவங்களைப் பெறுவதற்கே அவர்கள் சிறிலங்காவிற்கு வந்துள்ளார்களோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது.
No Responded To This Post
Leave A Reply