கலைஞருக்கு ஓர் திறந்தமடல்
-
வணக்கம் ஐயா!
நீங்கள் பூரண நலமைடைந்து மருந்துவமனையில் இருந்து கடமைக்குத் திரும்பிவர மனதாரவேண்டிக்கொள்ளுகின்றோம். உங்கள் கட்சிசார்பாகவும், அரசுசார்பாகவும் முன்னெடுக்கும் போராட்டங்கள், நீங்கள் எம்மக்கள்மீதுகொண்ட கரிசணையை வெளிப்படுத்தி நிற்கின்றது, அதற்க்கு முதற்கண் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஆனாலும் நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள், பேரணிகள் போன்றவற்றின் தளத்தைப் பார்க்கும்போது சிலகேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன. முதலாவதாக, பேரணிகள், மனிதச்சங்கிலி போன்ற நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தமிழகத்தில் தமிழ் மக்களை நோக்கியதாகேவே இருக்கின்றது, மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், மத்தியில் முக்கிய கூட்டணிக் கட்சியாகவும் இருக்கும் நீங்கள் யாரை நோக்கி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றிர்கள்? நீங்கள் தானே ஆட்சியில் உள்ளிர்கள் ! அரசாங்கத்துக்கா அல்லது மக்களுக்கா பிரச்சிணையை கொண்டு செல்லுகின்றிர்கள்? மக்களுக்கு ஆயின் மக்களிடம் அதை எடுத்துச் சொல்ல வேறு பல கட்சிகளும் அமைப்புகளும் இருக்கின்றனவே? ஆட்சியில் உள்ள நீங்கள் மத்திய அரசிடம் தானே தமிழ்மக்களின் அவலங்களை வலியுறுத்தவேண்டும்?
மத்திய அரசிடம் எடுத்துக்கூறவேண்டும் என்னும்போது, உங்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் பதவி விலகவேண்டும் என்று நாங்கள் கருதவும் இல்லை, விரும்பவும் இல்லை. நாம் விரும்புவதெல்லாம் நீங்கள் தொடர்த்தும் ஆட்சியில் பங்குபற்றி எமது அவல வாழ்வை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி எமக்கு ஓர் நிம்மதியான வாழ்வைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே. அதாவது, இப்பொழுது நாளாந்தம் நூற்றுக் கணக்கில் தமிழ்மக்கள் கொள்ளப்படுகின்ற்றனர், உதாரணமாக இரண்டு மாதங்களே கடக்காத இந்த ஆண்டில் மட்டும் 2000 அதிகமான மக்கள் படுகொலை செய்யப்படுள்ளார்கள்.
இந்த நேரத்தில், இந்திய மத்திய அரசாங்கமானது தமிழ்மக்கள் மீதான படுகொலைக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தால், சிறிலங்கா அரசானது மக்கள் மீதான இப்படுகொலைகளை நிறுத்தும் என்பதே வெளிப்படை உண்மையாகும். எமக்கு தெரிந்த விடயம் என்னவெனில், இந்திய அரசானது மௌனமாக இருந்து இப்படுகொலைகளை ஆதரிக்கின்றது என்பதே. ஆனால் மத்திய அரசின் இவ் மௌனத்தைக் கலைப்பதிற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், கோவப்படும் மக்களிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏற்ப்படும் நெருக்கடியை தடுப்பதற்கே தமிழகத்தில் போராட்டங்களை மேற்கொண்டு, தமிழினப் படுகொலையை ஆதரித்து நிற்கின்றிர்கள் என்றே கருதவேண்டியுள்ளது!
அத்துடன் என்னுமொரு விடயத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகின்றோம், அதாவது சகோதர யுத்தத்தைப்பற்றி அடிக்கடி முன்னரும் கூறிவந்தீர்கள், இப்பொழுதும் கூறிவருகின்றிர்கள். இதை நாங்கள் நியாயப்படுத்த முனையவில்லை. ஆனால் வேதனையான விடயம் என்னவெனில், அதில் சம்மந்தப்பட்ட பல அமைப்புக்களும் கட்சிகளும் அவற்றை மறந்து காலத்தின் தேவையுணர்ந்து "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற கூட்டமைப்பின்கீழ் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தை வலுவாக ஆதரித்து நிற்கும் இவ்வேளையில், ஏன் நீங்கள் பழைய கதையை மீண்டும் மீண்டும் கூறுகிறிர்கள் என்ற சந்தேகம் எழுகின்றது. ஏன்னெனில் நீங்கள் கூறும் அதே கதைகளை இப்பொழுது காங்கிரஸ்காரர்களும் திரும்பத் திரும்ப கூறுவதைப் பார்க்குப் பொழுது, நீங்கள் எமக்கு எதிரான சக்திகளின் திட்டமிட்ட சதிக்குள் மாட்டுப்பட்டு அவர்களுக்ககேவே கருத்துக்களை முன்மொழிகின்றிர்களோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியமலே போகின்றது.
இப்படிக்கு,
ஈழமகன்.
No Responded To This Post
Leave A Reply