வாழ்க ஜனநாயகம்!
-
கடந்தவாரம் சர்வதேச தமிழ் வானொலி ஒன்றிற்கு செவ்வியளித்த மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான தமிழ் பேசும் அமைச்சர் ஒருவர் , ஏன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வவுனியாவிற்குள் வந்த மக்களை சந்திப்பதிற்கு உறவினர்களையும், நண்பர்களையும் அனுமதிக்கவில்லை என வினாவியபோது, அவர்கள் உளரீதியகப் பாதிப்படைந்து உள்ளனராம் அதனால் தனிமைப்படுத்தி வைத்துள்ளர்களாம் என்று பதில் அளித்தார். அட! என்ன தத்துவம். அடப்பாவிங்களா! அம்மக்கள் உளரீதியாகப் பாதிப்படைந்து இருந்தால் முதலில் உறவினர்களையும், நண்பர்களையும் தானே சந்திக்கவிடவேண்டும் அவர்களால்தானே அவர்களை ஆறுதல்ப்படுத்தமுடியும். ஓ, அதைத்தான் ஆயுதம் தரித்த படையினர் செய்கிறார்களோ? சபாஷ் நல்ல உளவியல் நிபுணர்கள்! வவுனியாவிற்க்கு வந்த மக்கள் முட்கம்பிகளால் தடுப்பரண் அமைக்கப்பட்ட தடுப்பு முகாங்களில் தங்கவைக்கப் படுகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும், மருத்துவம் தொடக்கம் பாடசாலைகள் மற்றும் வங்கிகள் வரை எல்லாம் குறிப்பிட்ட காலத்துக்கு அங்கேயே செய்துகொடுக்கப்ப்படுமாம். ஆகா! என்ன அருமையான சுதந்திரம் அவர்களுக்கு. ஏன் ஒன்றைவிட்டியள்? அப்படியே ஒவ்வொரு முகாமையும் நாலாப்பிரிச்சு, தேர்தலும்வைச்சு முகாமிற்கு ஒரு முதல் அமைச்சரையும் தெரிவுசெய்துவிடலமே ! அப்படிச்செய்தால் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுத்ததாயும் போயிரும், அந்தப் பிரச்சினையும் முடிஞ்சிருமே?. வாழ்க ஜனநாயகம்!
No Responded To This Post
Leave A Reply