சிங்களப் பேரினவாத அரசினது, அனைத்துலக ஆதரவு மற்றும் அனுசரணையுடனும் நீண்டகாலத் திட்டமிடலுடனும் தொடக்கப்பட்ட வன்னி மீதான ஆக்கிரமிப்புப்போரின் இலக்கானது, புலிகளோடு சேர்த்து அவர்கள் பின்னால் நிற்கும் மக்களையும், குறிப்பாகப் புலிகளின் ஆளுகைக்குள் நீண்டகாலம் வாழ்ந்த மக்களையும் அழித்துவிடுவதைப் பிரதான அம்சமாகத் தன்னகத்தேகொண்டுள்ளது.
இது எல்லோராலும் நன்கு புரிந்துகொள்ளப்பட்ட விடயமாயினும், இது தொடர்பாக நான் மேலும் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்.
இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் நடைபெற்றதைப்போலவே, கிட்லர் பாணியிலான இனவழிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மகிந்த நிர்வாகம் தமிழ்மக்கள் மீது மேற்கொண்டுவருகிறது. பரப்புரை உத்தியாக மக்களை மீட்பதாகச் சொல்லப்பட்டாலும், போர்த்தந்திரோபாய அடிப்படையின்படி, புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறமறுக்கும் மக்களையும்சரி, வெளியேறி அரச ஆக்கிரமிப்புக்குள் அகப்படும் மக்களையும்சரி ஏதோவிதத்தில் கொன்றுகுவிப்பதே சிறிலங்கா இனவெறி அரசின் நோக்கமாக இருந்தது; இருக்கிறது. நடந்து முடிந்த பல சம்பவங்களே நான் இப்படிக் கூறுவதற்குக் காரணங்களாக இருக்கின்றன.
புலிகளின் பகுதிக்குள், மிகப் பாரதூரமானவகையில் செல் மற்றும் விமானக்குண்டுவீச்சுக்களின் மூலம் நாளாந்தம் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும்மேற்பட்டோர் காயமடைந்தும்வருகிறார்கள். அதேநேரம், பன்னாட்டு அமைப்புகள் அனைத்தையும் வன்னிப்பகுதியிலிருந்து வெளியேற்றி, நடந்தேறும் மனிதப்பேரவலத்திற்குச் சாட்சிகள் ஏதுமற்றதொரு சூழலை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, அங்கே பட்டினிச்சாவையும் ஏற்படுத்தவிழைகிறது மகிந்த சகோதரர்களின் சர்வாதிகார நிர்வாகம்.
ஆனால், அரச ஆக்கிரமிப்புப்பகுதிகளில் நடைபெறும் தமிழர்மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இதற்கு எந்தவிதத்திலும் குறைந்தவையல்ல.
வன்னியிலிருந்து வெளியேறிய மற்றும் அரசபடைகளால் வெளியேற்றப்பட்ட மக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையங்களை இடைத்தங்கல்முகாம்கள் என்று வெளியுலகிற்குச் சொன்னாலும், உண்மையில் அவை கிட்லர் பாணியிலான இனச்சுத்திகரிப்பு மற்றும் கடூழியச் சிறைச்சாலைகளே. வன்னியிலிருந்து வரும் மக்களைச் சிங்கள இனவாத அரசு பலகட்ட வடிகட்டல்களுக்குட்படுத்தி, இறுதியாக வவுனியா முகாம்களுக்கு அனுப்பிவருகிறது. இந்த வடிகட்டல் நடைமுறைகளின்படி, இளம்பெண்களும் ஆண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சந்தேகநபர்கள் என்ற பெயரில் தனிமைப்படுத்தப்படுகிறர்கள். பின்னர் ஆண்கள் கடும் உடலுழைப்பிற்கும் பெண்கள் படையினரின் பாலியல்த் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த வடிகட்டல்களுக்குத் தப்புவோர் வவுனியாவிலுள்ள முகாம்களில் முடக்கப்படுகிறார்கள்.

நன்கு திட்டமிட்டு, நீண்டகாலத் தயார்ப்படுத்தலின்பின் முன்னெடுக்கப்பட்ட இப்போரின் முதன்மை விளைவுகளிலொன்றான, ஆக்கிரமிக்கப்படும் அல்லது அரசின் மொழியிலேயே சொன்னால் விடுவிக்கப்படும் மக்களைத் தங்கவைப்பதற்கென ஒழுங்குசெய்யப்பட்ட வவுனியா முகாம்கள் போதிய அடிப்படை வசதிகளற்றுக் காணப்படுகின்றன. அமைவிடரீதியில் இம்முகாம்கள் நீர்பெறக்கூடிய வசதிகளையோ அதிக மக்களைத் தங்கவைக்கக்கூடியவகையில் போதுமான ஒழுங்குகளையோ கொண்டிருக்கவில்லை.
இன்றுவரைகூடப் பலர் மாற்றுடை வழங்கப்படாமலேயே அங்கு வாழ்கின்றனர். அத்துடன், முகாம்களுக்கு வெளியே வாழும் தமது உறவினர்களைச் சந்திப்பதற்கும், அவர்களிடமிருந்து தமக்கு வேண்டிய பொருட்களைப் பெறுவதற்கும் பலவித இடைஞ்சல்களை எதிர்நோக்குகிறார்கள். வெளியிலிருந்து ஒருவர் தனது உறவினர்கள் யாராவது உள்ளே இருக்கிறார்களா என்று அறியமுடியாது. இவர்களை உள்ளிருந்து யாராவது அடையாளங்கண்டு கத்திக்கூப்பிட்டால் மட்டுமே அதுவும்முடியும். மேலும் பலவித கெடுபிடிகளைக்கடந்து கதைக்கமுயன்றால், அப்போதும் குறிப்பிட்ட தூர இடைவெளியில் நின்றபடி உரத்துக்கதைக்கவேண்டும்.
முகாமின் இத்தகு நெருக்கடிகளுடன், அங்கே கைதுகளும் காணாமற்போதல்களும் தொடர்கின்றன. சிறிலங்கா அரசபடைகளால் விசாரணைக்கென இழுத்துச்செல்லப்படுவோர் மீளவும் முகாம் திரும்பும் சந்தர்ப்பம் மிக அரிது. கைதாகும் ஆண்கள் கடும் அடியுதை, சித்திரவதைகளின்பின் கொலைசெய்யப்பட்டு, போரில் கொல்லப்பட்ட புலிகளாகவோ அன்றிப் புலிகளின் புலனாய்வாளர்களாகவோ முத்திரைகுத்தப்படுகிறர்கள். பின்னர், இவர்களது உடலங்களை நீதிமன்ற அனுமதியுடன் புதைப்பதாகக் கதையளந்துவிட்டு, சண்டையொன்றில் இறந்ததாகப் புனையப்பட்ட புலிகளின் உடலங்களை அவர்கள் பெறமறுத்ததாகப் புலிகள் மீதே பழியையும் போட்டு ஒரு கல்லிற்குப் பல மாங்காய்களை விழுத்தப்பார்க்கிறது மகிந்த பரிவாரம்.
இந்நிலையில், வடிகட்டல் மற்றும் கைதுகள் மூலம் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம்பெண்கள், ஒன்றில் மேற்படி புனைகதைக்காகக் கொல்லப்படுகிறார்கள் அல்லது இராணுவ மருத்துவமனைகளில் வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்தபடி காயமடைந்த படையினரைப் பராமரிக்கவிடப்படுகிறார்கள்.
மேலும், சிறிலங்கா அரசானது தமிழினப்படுகொலைகளை இருமுறைகளில், இருபிரதேசங்களில் செய்யமுனந்த தனது முன்னைய நிலையை மாற்றித் தற்போது, ஒருமுறையில் ஓரிடத்தில் செய்யமுனைந்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது, வன்னிக்கு வெளியிலும் வன்னிக்குள்ளும் என்ற இரு பிரதேசங்களில் முறையே, கைது மற்றும் விசாரணைகள் என்ற வடிவிலும் செல் மற்றும் விமானத்தாக்குதல்கள் என்ற வடிவிலும் முன்னெடுத்த இனவழிப்பை, வன்னிக்குள் மட்டும் நடத்தவிழைவதாகத் தெரிகிறது.
ஏனெனில், தருமபுரத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கரும்புலித்தாக்குதலாக அரசு சித்தரித்தாலும், புலிகளால் மறுக்கப்பட்ட அத்தாக்குதலை அரசபடைகளே செய்ததாகத் தெரிகிறது. எடுத்ததற்கெல்லாம் ஆதாரங்கள் என்ற பெயரில் எதையெதையோ காட்சிப்படுத்தும் அரச ஊதுகுழல் ஊடகங்களும் பாதுகாப்பமைச்சும் இந்தவிடயத்தில் மாட்டுப்பட்டுவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. அதுபோலவே கனகராயன்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களைக் கொண்டுசென்ற பேரூந்தின்மீது வீதிக்கரையோரத்திலிருந்து கைகுண்டுத்தாக்குதலை நடாத்திப் பழியைப் புலிகள் மீது போட முயற்சித்தது. ஆனாலும் தாக்குதல் நடந்த இடம், ஆயுதம், முறை அனைத்தும், இதனைப் புலிகள் செய்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை என்பதையே காட்டுகின்றன. எனவே இத்தாக்குதல்களின் நோக்கம் மக்களைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறவிடாது தடுப்பதேயாகும் எனக்கருதவே வாய்ப்பளிக்கிறது.
அத்துடன், மிக இறுக்கமான செய்தித்தணிக்கைக்கு மத்தியிலும், பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் நாட்டைவிட்டே விரட்டப்பட்டும் ஊடகத்துறை அச்சுறுத்தப்பட்ட நிலையிலும், சில செய்திகள், குறிப்பாக வன்னிக்கு வெளியே தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இராணுவம்சார்ந்த குற்றச்செயல்கள் வெளித்தெரியவந்திருப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருத இடமுண்டு.
மேலும், தமிழ் ஊடகவியலாளரொருவர் தனது ஆக்கத்தில் எழுதியதுபோல், தமிழ்மக்களின் பேரவலங்கள் மறைக்கப்படமுடியாதவிதத்தில் வெளிப்படத்தொடங்கிவிட்டன. எனவே இத்தருணத்தில் தமிழ்மக்களை வன்னிக்குள்ளேயே வைத்துப் புலிகளின்மீதான தாக்குதல்கள் என்ற போர்வையில் அழித்துவிடும் முடிவிலேயே மேற்படி தகவல்கள் கசியவிடப்பட்டதாகச் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.
இத்தகு மனிதப் பேரவலத்தைத் தாங்கி, நரகவாழ்வுக்குள் வாழ்ந்தபடி வன்னிவாழ்மக்களும், உலகநாடுகள் பலவற்றின் ஆயுத, வள ஆலோசனைகளுக்கெதிராகத் தக்கதொரு தந்திரோபாயத்தை வகுத்துப் போரிடும் புலிகளும் சர்வதேசம் பற்றிய பேருண்மையை எமக்குணர்த்தியுள்ளார்கள்.
சில மாதங்களுக்கு முன்புவரை சர்வதேச சமுகமும் பன்னாட்டு அமைப்புகளும் எமக்கு ஆபத்பாந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு அவை புரியாதபுதிர்கள். இப்போது அவை வெறும் வேடதாரிகள்; பொய்யர்கள்; சுயநலமிகள். இந்தப் பொய்யர்களுக்குள் நமது மக்களுக்கு நன்கு பரிச்சயமான இணைத்தலைமை நாடுகள், இராணுவரீதியில் தலையிட்டுப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றிச் சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கென அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியக் கட்டளைப்பீடம் தயாராகிவருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
தமது இனப்படுகொலைகளுக்குச் சாட்சி இருக்கக்கூடாதென்பதற்காகப் பன்னாட்டு அமைப்புகளை வெளியேறச் சொன்னபோது வெளியேறி, வன்னி மக்களுக்கு உணவும் மருந்தும் வேண்டுமென்று கேட்டபோது அடக்குமுறையாளர்களிடமே அதற்கு அனுமதிகேட்டு, அவர்கள் மறுத்தபோது எதுவும் செய்யமுடியாதெனக் கைவிரித்து, சிங்கள இனவெறியரசின் தாளங்களுக்கெல்லாம் லயம் பிசகாது ஆடியவர்கள் இவர்கள். வவுனியாவிலுள்ள முகாம்களைப் பன்னாட்டு அமைப்புகள் பொறுப்பேற்கவேண்டும் என்று பலதரப்பினரும் விடுக்கும் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்காது இருக்கும் இவர்கள், இன்று வன்னிமக்களை வெளியேற்றமுயற்சிப்பதற்கான உண்மைக்காரணந்தான் என்னவோ? எதனைக் கொடுப்பதாகச் சிங்களம் இவர்களுடன் ஒப்பந்தம்போட்டுள்ளது?
சிங்களவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள். சர்வதேசம் தமது பக்கம் நிற்பதைத் தெரிந்துகொண்டும், எதிர்ப்பதாகப் பாசாங்கு காட்டிக்காட்டியே தமது காரியங்களை மிகச் சாதுரியமாக, இன்னும் இன்னும் வீரியத்துடன் சாதித்துக்கொண்டார்கள். ஆனால் நாமோ, அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்ந்து, சொந்த நாட்டுக்குக் கொஞ்ச விசுவாசத்தையும் அகதியாய்த் தஞ்சம் புகுந்த நாட்டுக்குக் கூடுதல் விசுவாசத்தையும் காட்டி, சர்வதேசம் எமக்கெதிராகச் செயற்பட்டபோதும் அதனைப் பெரிதும் நம்பி எமது நாடுசார் பணிகளில் கோட்டைவிட்டுவிட்டோம். அதாவது, நம்பிக்கெட்டுவிட்டோம். இது எமக்கொரு நல்ல பாடம். இந்த வரலாற்றுப்பாடத்திலிருந்து முயலுவோம். தற்போதைய நெருக்கடியென்பது முடிந்தமுடிவல்ல. நைஜீரியாவில் பயாவ்ரா தாயகம் கேட்டுப்போராடியவர்களைப் பொருளாதாரத்தடைகள் மூலம் பட்டினிச்சாவை ஏற்படுத்திப் பணியவைத்ததுபோலவே எமது விடுதலைப் போராட்டத்தையும் நசுக்கிவிடப்பார்க்கிறார்கள். இந்தவகையில் தற்போது வன்னியில் ஏற்பட்டுள்ள பட்டினிச்சாவுக்கும் சுகாதாரநெருக்கடிக்கும் எதிராகப் புலிகளும் தமது மற்றொரு களமுனையைத் திறந்துவிட்டார்கள். இந்தப் புதிய களமுனைக்கூடாக அவர்கள் எமக்கான செய்தியைச்சொல்லி, வீழ்ந்துவிடமாட்டோம் என்கிற நம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.

1 Responded To This Post
Yes,tigers will never give up their fight! till we get Freedom!
pathiplans@sify.com
k.pathi
karaikal
Leave A Reply